Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, April 1, 2012

என்ன வேண்டும்

எது வேண்டும் சொல் மனமே

அன்பு உள்ளம்

இன்ப வெள்ளம்

அண்மைப் பொருளெலாம்

அழகாய் மலரும்

தேவை இல்லை அன்பு பொழியக்

காசு பணம்

போதுமே பாசம் கொண்ட

நேச மனம்

பேச்சில் கடுமை

மாறா வன்மம் வளர்க்கும்

பேச்சில் இனிமை

பேரின்பம் பயக்கும்

எது வேண்டும் சொல் மனமே

இன்பம் வேண்டுமா அன்றித்

துன்பம் வேண்டுமா

எது வேண்டும் சொல் மனமே

நடராஜன் கல்பட்டு


--

Saturday, March 31, 2012

மெத்தை

Inline image 1

(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)

வெகு தூரம் நடந்து வந்தேன்

சுட்டெரிக்கும் வெய்யிலிலே

இளைப்பாரிட எங்குமே இல்லையே

இம்மி யளவும் பசு மரத்தின் நிழல்

இருந்தால் தானே மரங்கள்

இருந்திடும் நிழல்

வெட்டிடுறாரே அவைதான்

விரிவாக்கச் சாலைகளை

வெட்டிய மரமும் ஆகிடுமோ

வெல்வெட்டு மெத்தையாய்

கால் கடுக்க வெகு தூரம்

நடந்து வந்த எனக்கே

நடராஜன் கல்பட்டு

ஒரு சைவம் அசைவம் பேசுகிறது - மீனு வருது மீனு வருது

Inline image 2

(மெரீனா கடற்கரை 1956ல் – படம் நடராஜன் கல்பட்டு)

மீனு வருது மீனு வருது

கட்டு மரத்துலே

கட்டி இளுக்கிறோம் கட்டி இளுக்கிறோம்

தாம்பக் கவுத்தாலே நாங்க தாம்பக் கவுத்தாலே

ஓடி வாங்க ஓடி வாங்க

வகை வகையா மீனு பாக்க

வாங்கிடலாம் வாங்கிடலாம்

வாய்க்குப் புடிச்ச மீனெயுந்தான்

வெச்சுப் பாரு வெச்சு பாரு

மீனு கொளெம்பு நீ மீனு கொளம்பு

வாசம் வந்தே வாசம் வந்தே

ஆளெத் தூக்கும் அது ஆளெத் தூக்கும்

பரவும் பாரு வாசம் அண்டெ ஊட்டுக்கும்

சைவமுந்தான் அறியாமே

கையெத் தூக்கும் அது கையெத் தூக்கும்

மூக்கெ நல்லா அமுக்கிடவே

கையெத் தூக்கும்

01-04-2012 நடராஜன் கல்பட்டு