Thursday, July 9, 2009

எனக்குள் நான்

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

பெற்றோர் வைத்த பெயர் .
மாமாவுக்கும் இந்த பெயர்தான் .


உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
பிடிக்கும்.

கடைசியாக அழுதது எப்பொழுது ?


ஷிப்லி எழுதிய கவிதை படித்து கண் கலங்கினேன் .

நட்பைப்பற்றி எழுதியிருந்தார்.
நல்ல கவிதை
அனுபவ பயிற்சிகளில் கலந்து கொள்ளும் போது
கண் கலங்குவது உண்டு.
அழுவது தெரியாது.
பட்டது ரொம்ப துன்பம்-ஏற்றுக் கொண்டதால் இன்பமே.

உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என்ன
சொல்லலாம் .
நான் மருத்துவர் ஆகி இருக்கனும் .
படித்தாலும் புரியாது .

பிடித்த மதிய உணவு என்ன ?


கிடைத்தது உண்பேன் . இப்போது கொஞ்சம் கட்டுப்பாடு.
அதிகம் உண்பது இல்லை


நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

இல்லை .எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பதை விரும்புகிறேன்.

கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
பிடிக்கும் .சுனாமி வந்ததில் இருந்து கடலில் குளிப்பது இல்லை .
வெளியூர் சென்றால் தங்கும் விடுதிகளில் இருந்தால் நீச்சல் குளத்தில் நீந்துவேன்.

முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்கள்.

உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன
பிடித்தது - தேடும் எண்ணம் , உழைப்பு,
பிடிக்காதது -சோம்பல்
பிடிவாதம்.


யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

நான் விரும்பியவர்கள்.

இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
இரவு உடை.

என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ?
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சகியே.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
நீலம்.

நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

தாயுமானவன்...

நிறைய பேசினோம்

துரை...

பாசமுள்ள மீசைக்காரன்

சார்லஸ்...

நான் பேசிய முதல் ஆள்

ரிஷான் பயல்...

முன்பு அறியாத என்னை கலங்க வெச்ச

பின்பு அறிந்த என் ரிஷான் பாசமுள்ள பயல்.


உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?


நான் வில்லன் கட்சி.

பிடித்த விளையாட்டு?

சதுரங்கம்.1999 ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சதுரங்க போட்டியில்(( GM JAN TIMMAN VS KARPOV)) WORLD CHAMPION முதல் ஆட்டத்தில் பார்த்ததை நினைவு கூர்கிறேன்.
இந்த ஆண்டு 120 பேருடன் ஆடிய சர்ஜன் இஸ்மாயில் நினைவுக்கு வருகிறார். சுமார் ஆறு மணி நேரம் ஆடி தோற்றாலும் பாராட்டை பெற்றேன். நிலவுக்கு நன்றி.

கண்ணாடி அணிபவரா?
ஆம்

உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நீங்க சொல்லுங்களேன் .

உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

வருவதை ஏற்றுக் கொள்வதையும்

போவதை மறுப்பதையும்

உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

சோம்பல்.

எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

நான் நானாக இருக்க

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
வாய்க்கும் போது பதில் சொல்கிறேன்

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.


வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை