Friday, May 8, 2009

விடுதலை

இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள் உட்பட 13 தடுப்புக்காவல் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கும்.
இதனை இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
அவர்கள் அடுத்த “இரண்டு அல்லது மூன்று நாள்களில்” விடுவிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
“நான் அவர்கள் விடுவிக்கப்படுவது சம்பந்தப்பட்ட பத்திரங்களில் விரைவில் கையெழுத்திடுவேன்”, என்றாரவர்.
13 இசா கைதிகளும் விடுவிக்கப்படுவதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. ஆனால், அவர்கள் “இனிமேலும் தடுத்துவைத்திருப்பதற்கான தேவை இல்லை”, என்று மேலும் கூறினார்.
விடுவிக்கப்படவிருக்கும் 13 பேர்களில், அறுவர் மலேசியர்கள், இருவர் இந்தோனேசியர்கள், மீதமுள்ள ஐவரும் பிலிப்பினோக்கள்.
ஜுல்கெப்லி மார்ஜுகி, ஜெக்னால் அடில், அஸ்மி பிண்டாதுன், பி. உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், ஜைநுன் ரஷிட், அபவுட் கபார் இஸ்மாயில், சுபியன் சாலே, ஹஷிம் தாலிப், அப்துல் ஜமால் அஸகாரி, ஜமால் முகமட் சலாம் மற்றும் ஹுசின் அலி ஆகியோரே விடுவிக்கப்படவிருக்கும் 13 இசா கைதிகள்.
ஏப்ரல் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் நஜிப் 13 இசாக் கைதிகளை விடுவித்தார். அவர்களில் இண்ட்ராப் கைதிகள் ஆர். கெங்காதரனும் வி. கணபதிராவும் அடங்குவர்.
இன்னும் தடுப்புக்காவில் இருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள்: பி. உதயகுமார், டி. வசந்தகுமார் மற்றும் எம். மனோகரன்.
மனோகரன் கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினராவர். கடந்த பொதுத்தேர்தலில் தடுப்புக்காவல் கைதியாக இருந்துகொண்டே வெற்றி பெற்றார்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மலேசியர்கள் தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டததைத் தொடர்ந்து டிசம்பர் 2007 இந்த ஐந்து இண்ட்ராப் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு விவகாரத்தில், இஸ்லாமிய தீவிரவாதி செலாமாட் மாஸ் செலாமாட் கஸ்தூரி பிடிக்கப்பட்டு இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதை ஹிசாமுடின் உறுதிப்படுத்தினார்.
“மாட் செலாமாட் நமது தடுப்புக்காவலில் இருக்கிறார். அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்த ஒன்று அவரை கைது செய்வதற்கு உதவியது”, என்றார் ஹிசாமுடின்.

No comments:

Post a Comment